வருமுறை

வருமுறை ஓவியக்கலை க்யூபஸத்தை அடியொட்டி வளர்ந்தது. க்யூபிஸத்தைப்போல கருப்பொருள்களை பகுத்து மீளுருவாக்கம் செய்வதைவிடுத்து வருமுறை சமகால வாழ்வின் ஓயாத இயக்கத்தை முன்னிருத்த கருப்பொருள்களின் அசைவு, இயக்கம், ஆற்றல் இவற்றை முதன்மைப்படுத்தியது.

இத்தாலியில் தோன்றி வளர்ந்த வருமுறை ஓவியம் சமகால தொழில்நுடபம், இளமை, நுட்ப விளைபொருட்கள் (கார், கடிகாரம், விமானம், தொழிற்சாலைகள், நகரப் பேரியக்கம்,…) போன்றவற்றைக் கொண்டாடியது.

காலம்

பொதுயுகம் 1910 முதல் 1930 வரை.

முதன்மைக் கலைஞர்கள்

  • ஃபிலிப்போ தொமஸோ மரிநெட்டி - Filippo Tommaso Marinetti 1876–1944
  • ஜியகோமோ பல்லா - Giacomo Balla 1871–1958
  • உம்பர்த்தோ போச்சியோனி - Umberto Boccioni 1882–1916
  • ஜினோ ஸெவெர்நினி - Gino Severini 1883–1966