ரொகுக்கு
On this page
பரோக் வடிவத்தின் நீட்சியாக ரொகுக்கு உருவெடுத்தது. பிரெஞ்சு மொழியில் ரொ-குக்கு என்றும் ஆங்கிலத்தில் ரொக்கொக்கோ என்றும் உச்சரிக்கப்படுகிறது. பரோக்கின் நாடகத்தன்மையை மென்மையாக்கி, சமச்சீர் குலைவு, வளைகோடுகள், பளீரிடும் வெளிர் வண்ணங்கள், அதிக வண்ணமாறுபாடுகள் இல்லாதத் தீட்டல்கள், அசைவுகளும் இயக்கங்களும் நிறைந்த காட்சியமைப்புகள் போன்றவை ரொகுக்குவின் உத்திகளாயின. ரொகுக்கு வடிவத்தில் விளையாட்டுத்தனத்திற்கு நிறையவே இடமுண்டு.
பிரான்ஸின் மாமன்னர் பதினைந்தாம் லூயியின் காலத்தில் இவ்வடிவம் செழித்திருந்தது, ஆனால் அரை நூற்றாண்டுக்குள்ளாக இது மாற்றமடையத் தொடங்கியது. ரொகுக்குவின் இன்னொரு முக்கியம் அம்சம், ஓவியம், சிற்பம், கட்டக்கலை போன்றவை ஒன்றுடன் ஒன்று இயைந்து வளர்ந்தமை எனக் குறிப்பிடலாம்.
காலம்
பொதுயுகம் 1720 முதல் 1728 வரை.
முதன்மைக் கலைஞர்கள்
- யோவானி பத்திஸ்தா தியப்போலோ - Giovanni Battista Tiepolo 1696–1770
- ப்ரான்ஸ்வா பௌஷர் - François Boucher 1703–1770
- ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் - Jean-Honoré Fragonard 1732–1806