பின்-உணர்வுப்பதிவுவாதம்

பின்-உணர்வுப்பதிவுவாதம் அதற்கு முந்தைய உணர்வுப்பதிவுவாதத்தின் பரினாமமாக உருவாகியது என்று சொல்லலாம். இக்கலைஞர்கள் உணர்வுப்பதிவுகளைப் போலவே தடித்த தூரிகை விச்சுகளையும், பளீரிடும் நிறங்களையும் தொடர்ந்தனர். அதேவேளையில் இயற்கையையும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே காட்டும் முறையை மாற்றி சிதைந்த வடிவங்களையும், இயற்கைக்கு மாறுபட்ட நிறங்களையும் கைக்கொண்டார்கள். வடிவவியல் (நேர்க்கோடுகள், வளையங்கள், பல்கோணங்கள்) இவற்றுடன் இணையத்தொடங்கின.

இங்கிலாந்தின் ரோஜர் ஃப்ரை முதன்முறையாக பின் -உணர்வுப்பதிவுவாதம் என்ற சொல்லை விமர்சனத்தில் இவற்றை மாறுபடுத்தப் பயன்படுத்தினார்.

காலம்

பொதுயுகம் 1886 முதல் 1905 வரை.

முதன்மைக் கலைஞர்கள்

  • பால் செஸான் - Paul Cezanne 1839–1906
  • வின்செண்ட் வான்கோ Vincent van Gogh 1853–1890
  • பால் கூகன் - Paul Gauguin 1848– 1903
  • ஜார்ஜ் சௌராட் George Seurat 1859–1891