Title here
Summary here
கிட்டத்தட்ட முன்-பொதுயுகம் நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைக்கும் எல்லாவகையான ஓவியங்களையும் ஒருசேர பழங்கால ஓவியங்கள் என்று முறைமைப்படுத்துகிறார்கள். இதில் ஆரம்பகால கிறிஸ்தவ, பைஸாண்டிய, ஆங்கிலோ-ஸக்ஸான், வைகிங், கார்லோஜீனியன், ஓட்டோனியன், ரோமன், மற்றும் காத்திக் வகை ஓவியங்கள் அடங்கும். இந்தக் காலங்களில் இவற்றைத் தொகுத்துப் பாதுகாத்ததில் கிறிஸ்தவத் தேவாலயங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. மதக்கொள்கை விளக்கக் கலைகள் மாத்திரமல்லாது, பிற பொதுமை (மதம் சாரா) ஓவியங்களும் பெரிதும் தேவாலயங்களிலும் மடங்களிலுமே பாதுகாக்கப்பட்டன.