பரோக்

இந்த காலகட்டத்தில் மேற்கத்தியக் கலை ஆடம்பரமான அலங்காரங்களைக்கூடியதாக வடிவெடுத்தது. மறுமலர்ச்சி சிந்தனைகளிக் கருத்தாக்கங்களை உணர்ச்சி எழுப்பும் நாடகத்தன்மைகொண்ட வகையில் கலைஞர்கள் ஓவியம், இசை, சிற்பம், கட்டக்கலைகளில் வெளிப்படுத்தினார்கள். அடர்த்தியான வண்ணக்கலவைகளைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டும் வளைவுகளும் மேலெழும்பும் நேர்க்கோடுகளையும் கொண்ட ஓவியங்கள் படைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி சிந்தனைகளில் மேலெழும்பிய தனிமனித உணர்வுகள் வித்திட்ட சமுக சீர்த்திருத்தங்களுக்கான எதிர்வினையாக கத்தோலிக்க சர்ச் முன்னெடுத்த வடிவம் பரோக்.

காலம்

பொதுயுகம் 1600 முதல் 1730 வரை

முதன்மைக் கலைஞர்கள்

  • கரவாஜியோ - Caravaggio 1571–1610
  • பீட்டர் பால் ரூபென் - Peter Paul Rubens 1577–1640
  • ஜியான் லொரான்ஸோ பெர்னினி - Gian Lorenzo Bernini 1598–1680
  • டியகோ வெலாஸ்க்வெஸ் - Diego Velázquez 1599–1660