பண்பியல் வெளிப்பாட்டியம்

ஐரோப்பாவுக்கு வெளியே, அமெரிக்காவில் தோன்றி நிலைகொண்ட பெரும் கலைமுறை பண்பியல் வெளிப்பாட்டியம். இது ஐரோப்பாவில் மிகவும் போற்றப்பட்ட வாஸிலி கண்டின்ஸ்கி போன்ற மேதைகளின் ஆக்கங்களில் உத்வேகம் பெற்றது. அடையாளம் காணக்கூடிய அனைத்து பொருள் வடிவங்களையும் முற்றாக ஒதுக்கி அவற்றின் வண்ணங்கள் மற்றும் அவற்றில் ஊடுபாடும் இழைநயங்களையும் மாத்திரமே காட்டியது. சீலைகளில் தெளிக்கப்பட்ட பூச்சுக் குழம்புகளை வளைத்து, நெகிழ்த்து குழப்பமான அதேசமயம் கருத்தை ஈர்க்கும் பார்வை ஜாலங்களைக் காட்டியது. இன்னும் சிலர் இயல்பாய் நெளியும் தூரிகையோட்டங்களையும் தன்னிச்சை இயக்கங்களையும் கொண்டு உள்ளுணர்வின் வழிநடத்தலில் வரைந்தார்கள்.

காலம்

பொதுயுகம் 1940 முதல்.

முதன்மைக் கலைஞர்கள்

  • ஜாக்ஸன் போலாக் - Jackson Pollock 1912–1956
  • மார்க் ரோத்கோ - Mark Rothko 1903–1970
  • வில்லியம் தெ கூனிங் - Willem de Kooning 1904–1997
  • பார்னெட் நியூமன் - Barnett Newman 1905–1970
  • லீ க்ராஸ்நெர் - Lee Krasner 1908–1984