Title here
Summary here
உணர்ச்சி எழுப்பும் நாடகத்தன்மை கொண்ட பரோக் வடிவத்தையும், அதைச் சற்றே மாறுபடுத்தி இயக்கங்களையும், அசைவுகளையும், விளையாட்டுத்தனத்தையும் கொண்ட ரொகுக்கு-வையும் கடந்து நவசெவ்வியல் முறை உருவானது. இதை கிட்டத்தட்ட பழைய நிலைக்குத் திரும்பவது எனக் கொள்ளலாம். கட்டிடங்கள் பழங்கால கிரேக்க-ரோமன் கோவில்களைப் போல நெடிதுயர்ந்த தூண்ட்களையும் அகண்ட விசாலமான அறைவெளிகளையும் கொண்டவையாக மாறத்தொடங்கின. அதைப்போலவே ஓவியத்திலும் காட்சிநிலை உள்ளார்ந்த அமைதிக்குத் திரும்பியது. காட்சிகள் இயல்பான இயைந்தொழுகும் தன்மையைக் கொண்டிருந்தன. வரையும் முறையில் ஆடம்பரத்தையும் விளையாட்டையும் குறைத்துக் கட்டுபாடான நிலை உருவானது.
பொதுயுகம் 1750 முதல் 1830 வரை.