நவகலை
On this page
விளையாட்டுத்தனம், சொகுசு, விநோதம் இவற்றைக் கொண்ட நவகலை ஒழுங்கமைவில் இருந்த பழைய கலைமுறைகளைப் பின்னுகுத் தள்ளி, தனித்துவம், நளினம், சீரொழுகும் முறை இவைகளை முன்னிருத்தியது. அது செல்வச் செழிப்பு, மேல்தட்டுச் சீர்மை, தரச் சீர்கேடு என முரண்களை உள்ளடக்கியது. ஓவியத்தைப் போலவே விளம்பரம், தளபாட வடிவமைப்பு, வனைதொழில் (pottery) போன்றவற்றிலும் நவமுறை பேராதிக்கம் செலுத்தியது. இயற்கையின் மெல் வளைவுகள் (பூவிதழ்), தாவரச் சீர்வளர்ச்சி போன்றவை இதன் நுட்பங்களாயின. அதுவரை நுண்கலைகள் என்று பெரிதும் போற்றப்பட்டுவந்த ஓவியம், சிற்பம் இவற்றையும் புழங்குகலைகளான கட்டிடம், தளபாடம், சராசரி புழங்கு பொருட்கள் போன்றவற்றுக்கும் இடையேயான வேலிகளைத் தகர்த்து எல்லாவற்றையும் பெருங்கொண்டாட்டமாக மாற்றியது.
காலம்
பொதுயுகம் 1883 முதல் 1914 வரை.
முதன்மைக் கலைஞர்கள்
- குஸ்தாவ் கிளிம்ட் - Gustav Klimt 1862–1918
- அல்ஃபோன்ஸோ மூச்சா - Alphonse Mucha 1860–1939
- சார்லஸ் ரென்னி மக்கிண்டோஷ் - Charles Rennie Mackintosh 1868–1928