சமகால ஓவியங்கள்
On this page
இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொடங்கி இன்றைய காலகட்டத்தில் உருவாகும் அனைத்துவகை கலைகளையும் ஒட்டுமொத்தமாக சமகால ஓவியங்கள் என்று வகைப்படுத்துகிறோம். கணினியும், நுட்பமும் கைகொடுக்க, ஒவியம், வரைகலை, அசைபடம், ஹோலோகிராம், என்று பல வகைகளிலும் பெரும்பாய்ச்சல்கள் நிகழ்கின்றன. இவற்றைத் தனியே வகைபிரிப்பது கடினம். சமகால ஓவியங்கள் நம் சமுகம், குடும்ப வாழ்முறை, வாசிக்கும் செய்திகள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள், நாம் துய்க்கும் கலைகள் என எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒருவகையில் இது பின்நவீனத்துவ இலக்கியத்தின் நீட்சியாகவே நிகழ்கிறது.
முன்னெப்பொழுதும் இல்லாததைப் போல இந்த கலைப் பாய்ச்சல் உலகம் மூழுவதும் ஒரே சயமயத்தில், அதே நேரத்தில் தங்களுக்கே தனியான உள்ளூர் பாரம்பரியங்களின் அடிப்படையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விமானப் பயணமும், இணையத் தகவல் பெருக்கமும் காலம்-வெளி எல்லைகளைத் தகர்ப்பதைச் சாத்தியமாக்குகின்றன.
பொதுயுகம் 1950 முதல்.
முதன்மைக் கலைஞர்கள்
- சிண்டி ஷெர்மன் - Cindy Sherman - பிறப்பு: 1954
- ஜூடி சிக்காகோ - Judy Chicago பிறப்பு: 1939
- டேமியன் ஹிர்ஸ்ட் - Damien Hirst பிறப்பு: 1965
- ஆன்ஸ்லெம் கீஃபெர் - Anselm Kiefer பிறப்பு: 1945
- ஜெஃப் கூன்ஸ் - Jeff Koons பிறப்பு: 1949
- டேவிட் ஹாக்னி - David Hockney பிறப்பு: 1937
- மரினா அப்ரமோவிக் - Marina Abramović பிறப்பு: 1946
முடிவு
இது இத்தொடரின் இறுதிப்பக்கம். மீண்டும் முதல் பக்கத்திற்குச் செல்ல, இங்கே அழுத்தவும்