Title here
Summary here
கற்பனாவாதம் மேற்கத்தியக் கலைவரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். காட்சியைப் பின்னுக்குத் தள்ளி கலைஞனின் சுயபிரக்ஞை முன்னுக்கு வந்த காலம் அது. புலன்கள் உணரும் காட்சியை தன் உணர்வுக்கு உண்மையானவாரே கலைஞர்கள் பிரதிபலிக்கத் தொடங்கினர். இயற்கை நம் புலன்களைக் கடந்த பெருவெளி, அதை அப்படியே படம்பிடிக்கிறேன் என்று முயல்வது அபத்தமாகக் காணப்பட்டது. மாறாக, ‘நான் காணும் காட்சி இதுவே’ என்று கலைஞர்கள் தங்களை (தங்கள் கற்பனைகளை) முன்னிருத்தினர்.
பொதுயுகம் 1780 முதல் 1880 வரை.