March 6, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes
இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
சென்ற வாரம் க்ராமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விரைவில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விழாக்களில் இசைக்கும் திரைக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவுக்கு விருந்தினர்களின் உடைகளுக்கும் கூட. இதுபோன்ற விழா உடைகளில் முக்கியமான ஒன்று strapless dress என்று சொல்லப்படும் பட்டியில்லா கவுன். கிட்டத்தட்ட நம்மூரில் பெண்டுகள் காவிரி, வாய்க்கால், ஏரி, குளம் இன்னபிற நீர்நிலைகளில் நீராடும் சமயத்தில் புடவை (அல்லது தாவணியைக்) களைந்துவிட்டு பாவாடையை உயர்த்திக் கட்டிக்கொள்வார்களே அதே மாதிரி இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் - இதுபோன்று குறையாடை அணியும் சமயத்தில் நம்மூரில் கூச்சப்படுவார்கள், பிறர், குறிப்பாக ஆண்கள், பார்வையில் படுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் வெள்ளைக்கார தேசங்களில் இதற்கு எதிரிடை; பட்டியில்லா கவுன் அணிவது கொண்டாட்டங்களுக்காக. தம்மைப் பிறர் பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக. உயர்மட்ட ஒன்றுகூடல்களுக்குச் சென்றால் கணவான்கள் மூன்றடுக்கு கோட் அணிந்து கொண்டிருப்பார்கள். கழுத்துப்பகுதி கொஞ்சமும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக காலர் பட்டனைப் போட்டு, அது திமிறிக்கொண்டு திறந்துவிடக்கூடாது என்பதற்காக டை (அதிலும் இரட்டை முடிச்சு) போட்டு கட்டியிருப்பார்கள். மறுபக்கத்தில் ந்வநாகரீக நாரிமணிகள் பட்டியில்லா கவுன் முட்டிக்கு மேலிருக்க வேறெந்த ஆடையும் இல்லாமல் திரிவார்கள். சரி, விடுங்கள்.
இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் ‘காக்க காக்க, கனகவேல் காக்க’ என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அப்படியொன்றும் இந்த பட்டியில்லா கவுன் அலட்சியமாகத் தைக்கப்படுவதில்லை. அதில் நிறைய இயற்பியல் அடிப்படை இருக்கிறது என்று இன்றுதான் தெரியவந்தது. 1956 ஆம் ஆண்டு சார்லஸ் ஸீம் (Charles Seim) என்வர் “Stress Analysis of Strapless Evening Gown” என்று ஒரு ஆய்வறிக்கை எழுதியிருக்கிறார்.
“பிறருடைய கவனத்தை ஈர்ப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு பட்டியில்லா கவுன் சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அளவிற்குச் சிக்கலனாது அதை வடிவமைக்கு முறை. அது கட்டுமானப் பொறியாளர்களுக்கு மாபெரும் சவால்களை விடுக்கிறது” என்கிறது ஸீம்-இன் கட்டுரை.
If a small elemental strip of cloth from a strapless evening gown is isolated as a free body in the area of plane A in figure 1, it can be seen that the tangential force F1 is balanced by the equal and opposite tangential force F2. The downward vertical force W (weight of the dress) is balanced by the force V acting vertically upward due to the stress in the cloth above plane A. Since the algebraic summation of vertical and horizontal forces is zero, and no moments are acting, the elemental strip is at equilibrium.
இந்தக் கட்டுரையில் இரண்டு நுட்பக் கோட்டுப்படங்கள் இருக்கின்றன. இரண்டாவது படத்தில் முலையின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மெல்லியதாயினும் சற்றேனும் எடைகொண்டதாயிருப்பதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக மேகலை சரிந்துவிழ எத்தனிக்கையில் பருத்திருக்கும் கொங்கைகள் அதனைத் தாங்கிப்பிடிக்க அதன் மீது எதிர்த்திசையில் செலுத்தும் விசைகள் யாவை என்பதை சார்லஸ் ஸீம் துல்லியமாக விளக்குகிறார். ஆர்த்த தடமுலைகளைத்தான் இவ்வாடைகள் ஆரத்தழுவியிருக்கும் என்பது பொய்க்கணக்கு; அளவிற் சிறிதெனினும் அதற்கொப்ப ஆடை சமைக்கமுடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
Exposure and, correspondingly, more attention can be had by moving the dress line from a toward b. Unfortunately, there is a limit stress defined by S=F/2A (A being the area over which the stress acts). Since F/2 is constant, if the area A is decreased, the bearing stress must increase. The limit of exposure is reached when the area between b and c is reduced to a value of ‘danger point’.
சார்லஸ் ஸீம்-இன் இந்த அற்புத விளக்கத்தின் மேல் கடந்த அரை நூற்றாண்டுகளாகக் கவிஞர்கள் கற்பனையை விரித்துக் கவிபாடியிருக்கிறார்கள். யாழினிகளும் பாணர்களும் தங்கள் இசையை ஸீம்-இன் இயற்பியல்மேல் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.
பன்னெடுங்காலமாகக் கொங்கைகளின் மேல் தவழும் மேகலைசற்றே சரிந்தும் கலையாதிருக்கும் இரகசியம் இதுதான்.
Ref: Stress Analysis of Strapless Evening Gown, Annals of Improbable Research, Charles Seim, March-April 2007
முதலில் பதிப்பிக்கப்பட்டது: 13 பெப்ருவரி 2007