# செயற்கை நுண்ணறிவால் மேம்படுத்தப்பட்ட எழுத்துணரி99 சதவீத துல்லியம் கொண்ட தமிழ் எழுத்துணரி சாத்தியமாகியிருகிறது
சமீபத்தில் நேச்சர் அறிவியல் சஞ்சிகைக் குழுமத்தின் Scientific Reports-ல் பதிப்புக்கு முந்தைய கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. தஞ்சாவூர் சஸ்த்ரா பல்கலைகழக ஆய்வாளர்களின் இந்தக் கட்டுரை, அவர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தியிருக்கும் தமிழ் எழுத்துணரி 99.84% துல்லியம் கொண்டதாகக் கணித்திருக்கிறார்கள். 

{{< galleries >}}
{{< gallery src="tamil_ocr_comparison.png" title="Tamil_OCR_Comparison" >}}
{{< /galleries >}}

தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மின்னாக்கம் செய்வது எப்பொழுதுமே சிக்கலானதாகத்தான் இருந்து வருகிறது. தமிழில் பல எழுத்துக்கள் மிகச் சிறிய வேறுபாட்டையே கொண்டவை. உதாரணமாக 'தரம்' மற்றும் துணையெழுத்து கொண்ட (தாம்) இரண்டையும் சராசரிக் கையெழுத்திலிருந்து வேறுபடுத்துவது சுலபமில்லை. 

இந்தக் கட்டுரை இன்னும் முழுமையாக சக-வல்லுநர்களின் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவில்லை.  இது சரியாக இருக்கும்பட்சத்தில் பழைய ஆவணங்களை விரைவாக மின்னாக்கம் செய்து பாதுக்காக்க முடியும். 

Periyasamy, H., Natarajan, S. & Amirtharajan, R. Deep inception neural network with residual connections for Tamil handwritten character recognition. Sci Rep (2026). https://doi.org/10.1038/s41598-026-36330-7