சிவதாசனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

September 23, 2025 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

அசை சிவதாசனின் குற்ற ஆலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், 2025 இயல் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடலும்

Sivathasan Book Release

காலம் வாழும் தமிழ் 2025-ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது யுவன் சந்திரசேகர், பேரா. சச்சிதானந்தன் சுகிரதராஜா மற்றும் பிற விருதாளர்கள் ரவி சுப்பிரமணியன், இரவி அருணாசலம், த. பிச்சாண்டி ஆகியோருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை ஒழுங்கமைக்கிறது. இந்நிகழ்வில் நண்பர் அசை சிவதாசனின் குற்ற ஆலம் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி நான் பேசவிருக்கிறேன்.