March 9, 2026 in சமூகம் 2 minutes
சக குடிகளை ஒவ்வொரு நாட்டுமக்களும் எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது குறித்து Pew Research Center நடத்திக கருத்துக்கணிப்பு

ஒரு கணிப்பில் அந்நிறுவனம் உலக நாடுகளின் மக்கள் தங்கள் சக குடிகளின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் குறித்து எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று கேட்டிருக்கிறது. அதன் முடிவுகளில் கனேடியர்கள் தங்கள் சககுடியினரைக் குறித்து அசாத்திய நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதற்கு நேர்மாறாக அமெரிக்கர்களில் 53 சதவீதத்தினர்கள் தங்கள் நாட்டு சககுடிகளின் விழுமியங்களைக் குறித்து அவநம்பிக்கை கொண்டிருப்பதாவும் தெரியவந்திருக்கிறது. சொல்லப்போனால் கருத்து கேட்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் மாத்திரமே இந்த அவநம்பிக்கை இருக்கிறது.
இந்த முடிவுகள் குறித்து உயர்கல்வி வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இது அமெரிக்க சமுகம் சீரழிந்து வருவதைச் சுட்டுகிறது என்று சிலரும், இது அழியப்போகும் அமெரிக்கப் பேராதிக்கத்திற்குக் கட்டியம் கூறுகிறது என்று சிலரும், இந்தச் சீரழிவில் ட்ரம்பின், குடியரசுக்கட்சியின் பங்கு என்ன என்று வேறுசிலரும் வியாக்கியானங்களை எழுதியிருக்கிறார்கள். கனடாவிடமிருந்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்ற ரீதியிலும் விவாதங்கள் பேராசிரியக்ர்ளுக்குள்ளும் நடக்கிறது.
என்னைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் கனடாவுக்கு எந்த உயர் விழுமியச் சான்றையும் அளிக்கவில்லை என்றே நம்புகிறேன். ஆனால் இது சொல்லும் ஒரு விஷயம் மிகவும் சரியானது. கனேடியர்கள் அமெரிக்கர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள். அம்மாத்திரமே!
We asked people around the world to rate the morality and ethics of others in their country.
In nearly all countries surveyed, more people say that others in their country have somewhat or very good morals than say their compatriots display somewhat or very bad levels of morality.
The United States is the only place we surveyed where more adults (ages 18 and older) describe the morality and ethics of others living in the country as bad (53%) than as good (47%).
Because we have never asked this question before, we don’t know whether a majority of Americans have long held a skeptical view of the ethics of fellow Americans, or if it’s something new – and if so, what’s driving it. But partisan politics appear to play a role.