என் முதல் புத்தகம் ‘குவாண்டம் கணினி’ வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அடுத்த கட்டுரைத் தொகுப்பு ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ தமிழினி வெளியீடாக வரவிருக்கிறது. இது இவ்வாண்டின் சென்னைப் புத்தகக் காட்சிக்குத் தயாராகிவிடும் என்று பரவலான ஹேஷ்யங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுது முகப்பு அட்டை வடிவம் தயாராகிவிட்டது.