# ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும்சார்நிலைத் தத்துவமும், சதுரவியமும் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப்பகுதியில் தோன்றி வளர்ந்தன. இரண்டுமே காலம்-வெளி இவற்றின் வரையறைகளை மாற்றியெழுத முற்பட்டன.  எனவே பலரும் அந்தக் கலையும் அறிவியலும் ஒன்றையொன்று பாதித்து முற்செலுத்தியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள்.  ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை.

{{< figure
  src="images/picasso_damselles.jpg"
  alt="Picasso Damselles"
  caption=""
  style="width:400px"
>}}

ஐன்ஸ்டைனின் சார்நிலைத் தத்துவமும், பிக்காஸோவின் சதுரவியமும் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப்பகுதியில் தோன்றி வளர்ந்தன. இரண்டுமே காலம்-வெளி இவற்றின் வரையறைகளை மாற்றியெழுத முற்பட்டன.  எனவே பலரும் அந்தக் கலையும் அறிவியலும் ஒன்றையொன்று பாதித்து முற்செலுத்தியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள்.  ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை.  பிக்கோஸோவின் ஓவியங்கள் குறித்து ஐன்ஸ்டைனுக்கு ஆர்வம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. மறுபுறம் ஐன்ஸ்டைனின் நவீன இயற்பியலும், உயர் கணிதமும் பிக்காஸோவுக்குப் புரிந்திருக்கச் சாத்தியமும் அதிகமில்லை.  எனவே ஊகங்கள் அம்மாத்திரமாகவே ஒரு நூற்றாண்டுக்கு நீடித்தன. ஆர்தர் மில்லர் என்ற இலண்டன் பல்கலைக்கழக் கழகக் கல்லூரியின் வரலாறு மற்றும் தத்துவப் பேராசிரியர் ஐன்ஸைடைனுக்கும் பிக்காஸோவுக்குமான தொடர்புகளை அவருடைய 2001 ஆண்டு புத்தகத்தில் ஆராய்ந்திருக்கிறார். இருவரையும் இணைக்கும் ஒரு மூன்றாவது புள்ளியை அவர் அடையாளம் கண்டார்.  அது ஆன்றி பாங்கரெ. 

முழுக்கட்டுரையையும் இன்றைய சொல்வனத்தில் வாசிக்கலாம். [இணைப்பு](https://solvanam.com/2026/03/08/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/)